Categories
சினிமா தமிழ் சினிமா

‘எப்போதுமே எங்கள் ராணி’… ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவு… ட்விட்டரில் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட குடும்ப புகைப்படம் …!!!

ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எப்போதுமே எங்கள் ராணி’ என பதிவிட்டு குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் . அவரது மறைவால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர் . மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்களும் ,ரசிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எப்போதுமே எங்கள் ராணி’ என பதிவிட்டு குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் குடும்பத்தினர் சுற்றி நிற்க மகாராணி போன்று கரிமா பேகம் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

Categories

Tech |