Categories
சினிமா தமிழ் சினிமா

‘எப்போதுமே சிங்கம்’… தோனியை பாராட்டிய தனுஷ், லோகேஷ் கனகராஜ்…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி களமிறங்கி 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘7… அவ்வளவுதான். அதுதான் டுவிட்’ என பதிவிட்டுள்ளார். 7 தோனியின் ஜெர்ஸி எண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஒருமுறை சிங்கம். எப்போதுமே சிங்கம்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |