தெலுங்கானாவில் நபர் ஒருவர் மனைவி மீது சந்தேகமடைந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் என்ற மாவட்டத்தின் யெறபாலம் என்ற கிராமத்தில் நாகா ஷேஷிரெட்டி மற்றும் நவ்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திருமணம் நடந்ததில் இருந்து முகநூல் உட்பட பல இணையதளங்களை பயன்படுத்துவதில் நவ்யா அதிக விருப்பம் காட்டி வந்துள்ளார். இதனால் ஷேஷிரெட்டி பல தடவை நவ்யாவை கண்டித்துள்ளார். எனினும் அவர் அதனை நிறுத்தததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஷேஷிரெட்டி தன் மனைவி மீது சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறேன் என்று நிவ்யாவிடம் கூறி கோத்தப்பள்ளி குட்டா பகுதியில் கொலை செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஷேஷிரெட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.