சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிராவோ..
2011 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டுவைன் பிராவோ.. இவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். பேட்டிங், பவுலிங், பில்டிங் என 3 துறையிலும் மிகச் சிறப்பாக பங்களிப்பை அளித்து வரும் பிராவோ கேட்ச் பிடிக்கும் போதெல்லாம் தனது மகிழ்ச்சியான நடனத்தால் ரசிகர்களை ஈர்ப்பார்.. இவரது டான்ஸுக்கு என மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும் டுவைன் பிராவோ தற்போது ஓய்வை அறிவித்திருக்கிறார். வரக்கூடிய 2023 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார்.. அதே சமயம் சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தனது பணியை செய்ய இருக்கிறார். லட்சுமிபதி பாலாஜி ஒரு வருடம் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வை அறிவித்துள்ளார். ஆனாலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி இடம் பெறுவார்.
இந்த சூழலில் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் கடினமான டி20 லீக்கில் 15 ஆண்டுகள் விளையாடிய பிறகு, இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன் என்று இன்று அறிவிக்கிறேன். இது ஒரு சிறந்த பயணம், நிறைய ஏற்ற தாழ்வுகள். அதே சமயம் கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாக இருந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது ரசிகர்களுக்கும் இது ஒரு சோகமான நாள் என்பதை நான் அறிவேன். ஆனால் அதே நேரத்தில், கடந்த 15 வருடங்களாக எனது வாழ்க்கையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் முன்னேறி, எனது பந்துவீச்சை தொங்கவிடத் தயாராகும்போது, எனது பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த புதிய வாய்ப்பைப் பற்றி நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்; அடுத்த தலைமுறை சாம்பியன்களுக்கு உதவுவதற்கு, மேம்படுத்துவதற்கு எனது அழைப்பு இப்போது உள்ளது. பல ஆண்டுகளாக அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எப்போதும் (சென்னை சூப்பர் கிங்ஸ்) என எல்லோ இமோஜியை பதிவிட்டுள்ளார்..
161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பிராவோ. ஆல்-ரவுண்டர் 130 ஸ்டிரைக் ரேட்டில் 1560 ரன்களை எடுத்துள்ளார், சூப்பர் கிங்ஸின் பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். பிராவோ 2011 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வருகிறார். 2011, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் வெற்றிகளிலும், 2014 இல் சாம்பியன்ஸ் லீக் டி20 வெற்றியிலும் அவர் ஒரு அங்கமாக இருந்தார். ஊதா நிற தொப்பியை வென்ற முதல் வீரரும் ஆவார். ஐபிஎல் சீசனில் 2 முறை (2013 மற்றும் 2015) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 144 போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்டுகளை வீழ்த்தி 1556 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/ClqLozEpQUd/?utm_source=ig_web_copy_link