Categories
மாவட்ட செய்திகள்

“எப்போதும் செல்போன் பார்க்காதே” திட்டிய பெற்றோர்…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரியலூர் மாவட்டம் நல்லநாயக்கபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ சேர்ந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியுள்ளார். அவரின் பெற்றோர் எப்போது செல்போனை பார்த்து கொண்டே இருக்காதே  என்று திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தம் அடைந்த செல்வகுமார் கடந்த 10ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |