வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவர் தினமும் அலுவலகத்திற்கு ஒரே ஆட்டோவில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்ட ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்களும் எப்படியாவது அந்த பெண்ணை கடத்தி தங்களது ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதை அறியாத அந்த பெண் சம்பவத்தன்று தனது அலுவலகத்திலிருந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்ல அந்த ஆட்டோவில் ஏறி உள்ளார்.
அப்போது அவருடன் சில ஆண்களும் ஏறியுள்ளனர். இதுகுறித்து அந்தப்பெண் ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது சிறிது நேரத்தில் இவர்கள் எல்லாரும் இறங்கி விடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ஆட்டோ ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி விட்டு ஆட்டோவில் இருந்த டிரைவரும், சக நண்பர்களும் அப்பெண்ணை துன்புறுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.