மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிகாகோ மாவட்டத்தில் இன்று இந்து ஜெகாரண வேதகி எனும் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் எப்போது என்ன நடக்கும் என்பது தெரியவில்லை? தற்காத்துக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. யாரேனும் அத்துமீறி நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மை தாக்கினால் பதிலடி கொடுப்பது நமது உரிமை ஆகும். ஜிகாத் செய்யும் பாரம்பரியத்தை அவர்கள் கொண்டுள்ளனர். எதுவும் செய்யாவிட்டால் லவ் ஜிகாத். அவர்கள் லவ் செய்தாலும் அதிலும் ஜிகாத் செய்கின்றனர். நாம் காதல் செய்கிறோம். மேலும் “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிஷனரி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டாம். அப்படி அனுப்பினால் உங்களுக்கான முதியோர் இல்லத்தை நீங்களே தேர்வு செய்து கொள்கிறீர்கள்” என அவர் கூறியுள்ளார்.