Categories
மாநில செய்திகள்

எப்போது பள்ளிகள் திறப்பு?…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்வு சார்ந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து ஒன்பதாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 10ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆகியவற்றின் காரணமாக ஜூன் மாதம் 20 அல்லது 27-ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே மாதம் 14ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். எனவே 1 முதல் 10ஆம் வகுப்புகளை ஜூன் 13ஆம் தேதி முதல் திறக்கவும்,  உயர் வகுப்புகளை ஜூன் 20-ஆம் தேதி முதல் 27ம் தேதி திறக்கலாம் என கூறப்படுகின்றது.

Categories

Tech |