Categories
சினிமா தமிழ் சினிமா

“எப்போனாலும் நான் ரெடி” ரசிகரின் கேள்விக்கு யுவன் உடனடி பதில்…!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளராக யுவன் இருந்து வருகிறார். ஏராளமான அஜித் படங்களில் இசையமைத்த யுவன், விஜய் நடித்ததில் புதிய கீதை படத்தின் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைத்துள்ளார்.

அந்த படத்தின் பின்னணி இசையை அவரது தம்பியான கார்த்திக் ராஜா அமைத்துள்ளார். சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் தனது ரசிகர்களுடன்  கலந்துரையாடிய யுவனிடம் ரசிகர் ஒருவர் ‘எப்போ தளபதி கூட ஒர்க் பண்ண போறீங்க’ என கேட்டார். அதற்கு யுவன், நான் விஜயுடன் ஒர்க் செய்ய எப்போதும் ரெடி தான் என பதில் கூறியுள்ளார். இதனால் விரைவில் விஜய்-யுவன் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

 

Categories

Tech |