Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எப்போ உயிர்பலி வாங்கும்னே தெரியல..! இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா..? பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

மயிலாடுதுறையில் சேதமடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி புதிதாக கட்டித்தரப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அசிக்காடு ஊராட்சி பூந்தோட்டம் பிள்ளையார் கோவில் தெருவில் நீர்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இது கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது தண்ணீர் குழாய்கள் உடைந்து, நீர் தேக்கத் தொட்டி மிகுந்த சேதம் அடைந்துள்ளது. அதிலுள்ள இரும்பு ஏணியும் பழுதடைந்து காணப்படுகிறது. கம்பிகள் தெரியும் வண்ணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது . இந்த தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. நீர்தேக்க தொட்டியில் நீர் கசிவும் ஏற்படலாம்.

இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகில் பிள்ளையார் கோவில், அய்யனார் கோவில், பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். இதனால் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென இடிந்து விழுந்தால் அங்கு செல்பவர்களுக்கு ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேதமடைந்த நீர் தேக்க தொட்டியை முருகன் தோட்ட கிராம மக்கள் சார்பில் தொட்டியை இடித்து மாற்றி விட்டு புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா ? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |