‘ராட்சசன்’ படம் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி, அதன்பின் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வளர்ந்து வரும் நாயகிகள் வரிசையில் உள்ளார். அம்மு அபிராமியின் முதல் வெளியீடுகள் என் ஆளோட செருப்பக் காணோம் (2017), தீரன் அதிகாரம் ஒன்று (2017), ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இந்நிலையில், அவரிடம் உங்கள் திருமணம் எப்போது என்று ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் கேட்டிருந்தார்.
அதற்கு அபிராமி, “22 வயதுதான் ஆகிறது. எனக்கு பல கனவுகள் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். தற்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. அந்த நினைப்பு வந்தால், கண்டிப்பாக செய்துகொள்வேன்” என கூறியுள்ளார்.