கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இந்நிலையில் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன.
இந்நிலையில் இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். கவுதம் கார்த்திக் கூறும்போது “எனக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும். நேரம் வரும்போது திருமணம் குறித்து பேசுவேன்” என்றார்.