Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா தமிழ் சினிமா

எப்போ கல்யாணம் செய்யலாம்? குழப்பத்தில் நடிகை மியா ஜார்ஜ் ..!!

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் திருமண குழப்பத்தில் உள்ளார்.

தமிழில் அமரகாவியம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ் . இவர் நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து,  போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் மியா ஜார்ஜுக்கும்  ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கொரோனாவால் தேதி முடிவு செய்ய முடியாத தவிப்பில் குடும்பத்தினர் உள்ளனர்.

இதைப்பற்றி மியா ஜார்ஜ் கூறியது என்னவென்றால் எனது திருமண நிச்சயதார்த்தத்தை பெற்றோர்கள் முடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிந்ததும் திருமணத்தை நடத்த திட்டமிட்டோம் . ஆனால் அது தீவிரமடைந்து வருகிறது. இதனால் திருமணத்தை விமரிசையாக நடத்தலாமா? எளிமையாக நடத்தலாமா? அல்லது கொரோனா பரவல் முடிந்த பிறகு திருமணத்தை நடத்தலாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறோம்.

Categories

Tech |