தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹெல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சோபா பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதாவது செப்டம்பர் 23 வரை வழங்கப்படவேண்டிய 37.3 டிஎம்சி காவிரி நீரை இன்னும் கர்நாடகா வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
கர்நாடகாவில் அதிக அளவில் மழை பெய்து வரும் நிலையில் காவிரி நீர் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டை உடனே வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும், கர்நாடகா செயல்படுத்தவில்லை எனவும் தமிழக அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.