Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும்… உஷாரா இருங்க…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

செம்பரபாக்கம் ஏரியல் உபரி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாண்டஸ்  புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் நீர் வரத்து அதிகமானது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு  பெய்த கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை 100 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர்.

மேலும் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். ஆனால் ஏரியின் நீர்மட்டம் 22.25 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,046 கண்ணாடியாகவும் இருந்தது. இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் திறந்து விடப்படும் உபரி நீர் திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் ஆகிய  பகுதிகளின் வழியாக செல்லும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள  அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |