Categories
சினிமா தமிழ் சினிமா

எப்போ வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ள போவிங்க?… ரசிகர் கேட்ட கேள்வி… பதிலளித்த பிக்பாஸ் அர்ச்சனா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சனாவிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட கடுமையான போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா . இவர் கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு அர்ச்சனா பதிலளித்துள்ளார். அதில் நீங்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக எப்போது செல்வீர்கள் ? என்ற கேள்விக்கு ‘ஐயோ வேண்டாம் சாமி… என் வீடு என்ற சொர்க்கத்தில் இருக்கிறேன்’ என அர்ச்சனா பதிலளித்துள்ளார் .

VJ Archana's bio - Everything fans need to know about the Bigg Boss Tamil 4  contestant

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா மற்றும் நிஷா இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘என் தந்தை இறப்பு உங்களுக்கு கிண்டலா ? என் தந்தை மேலே இருந்து உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வார்’ என அர்ச்சனா கூறியுள்ளார். பின்னர் ‘அர்ச்சனா என்பவர் மீது நான் தனிப்பட்ட மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவரது விளையாட்டை பார்த்து அவரை வெறுக்கிறேன்’ என ஒரு ரசிகர் கூற வெறும் 67 மணி நேரத்தில் என்னுடைய கேரக்டரை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் ? என்றுள்ளார் அர்ச்சனா. இறுதியாக நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜீ டிவியிலேயே இருந்திருக்கலாம் என கூறிய ரசிகருக்கு , ‘நான் எடுத்த முடிவில் எப்போதும் பின்வாங்கியதில்லை நான் இப்போதும் சரியான முடிவை தான் எடுத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |