ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோன் நகரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எமதர்மன், சித்திரகுப்தன் வேடத்தில் வந்து விழிப்புணர்வு அளித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளூர் கலைஞர்களை கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பயப்பிலி நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் என்பவர் கொரானா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு குதிரையின் உடம்பில் கொரானா வைரஸ் போன்ற ஒரு படத்தினை வரைந்து கொண்டு ஊர்வலமாக வந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதேபோன்று கர்நாடகா போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறு நாடகம் ஒன்றை நிகழ்த்தி காண்பித்தனர். வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றும் நபர்களை கொரோனா எவ்வாறு கவ்வும் என்பதை விலக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்தது.
தமிழகத்திலும், காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பாடல் மூலம் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொரானா பரவலை தடுக்க நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அலட்சியமாக கூட்டம் கூடுவதும், வெளியே செல்வதுமாக இருக்கின்றனர். இதன் பாதிப்புகள் தெரிந்தும் அலட்சியப்படுத்துவது வேதனையை தருகிறது. அதனடிப்படையில், போலீசாரும் தங்களால் முடிந்தவரை மக்களை வீட்டுக்குள் இருக்க வைப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், உள்ளூர் கலைஞர்களை பயன்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் ஈடுபட்டனர். இது குறித்து பேசிய காவல் அதிகாரி சுதாகர் ரெட்டி, ” கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முறையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். உத்தரவை மீறி வெளியே வருவோரை எமதர்மன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்களை அழைத்து சென்று விடுவார்” என தெரிவித்துள்ளார். ரூம் போட்டு யோசிப்பாங்க போல நம்ம நாட்டு போலீஸ். ஆனாலும் மக்கள் நடமாட்டம் சில பகுதிகளில் குறையவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்று.