ஆப்பிள் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நம் உயிருக்கு எமனாக மாறுகிறது. இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது அனைவரும் ஏற்கக் கூடிய கருத்து. ஆனால் அதிக அளவு ஆப்பிள் சாப்பிடுவதாலும் நமக்கு பிரச்சனை ஏற்படும். ஒரு நல்ல உடல் திறனுக்கு ஒரு மனிதன் சராசரியாக இரண்டு ஆப்பிளை சாப்பிடலாம். அதற்கு மேல் அவர் உட்கொள்ளும் பட்சத்தில் சில பக்கவிளைவுகள் ஏற்படும். ஒருவரின் வயது மற்றும் அவர் சார்ந்த பாலினத்திற்கு ஏற்ப ஒரு நாளைக்கு 20 முதல் 40 கிராம் அளவிலான நார்ச் சத்துக்கள் கிடைக்க வேண்டும்.
70 கிராமிற்கு மேல் அதிகரித்தால் செரிமான கோளாறு ஏற்படும். நாளொன்றுக்கு 15 ஆப்பிள் சாப்பிட்டால் மட்டுமே நமக்கு 70 கிராம் நார்ச்சத்து கிடைக்கும். அது மட்டுமில்லாமல் பீன்ஸ், முழு கோதுமை ,காய்கறிகள் மூலம் நமக்கு சில நார் சத்துக்கள் கிடைக்கின்றது. எனவே நாம் நான்கு ஆப்பிள்களை உட்கொண்டாலே 70 கிராமுக்கு மேல் நார் சத்து நமக்கு கிடைக்கின்றது. ஆப்பிள் பழத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சத்து இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு பலவகை உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கிறது.
ஆப்பிளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை நமது உடலில் கொழுப்புகளாக மாறி விடுகிறது. அதிகப்படியான கொழுப்பு நம் உடல் எடையை அதிகரிக்கும். ஆப்பிள் பழங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, செரிமான மண்டலத்தை பாதித்து ஜீரண திறனை தடைசெய்யும், இதனால் அடிக்கடி வீக்கம், வயிறு கோளாறு ,செரிமான பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.