Categories
அரசியல் மாநில செய்திகள்

எமெர்ஜென்சியவே எதிர்த்தவங்க நாங்க…. அட யாருங்க இந்த அண்ணாமலை…. மாஸ் காட்டிய கே.என் நேரு…!!!

நடந்து முடிந்த தேர்தலில் திமுக பத்து வருடங்களுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இவ்வாறு தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சியினர் திமுக அரசை குறைகூறி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளில் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் .அப்போது பேசிய அவர், திமுகவினர் எதிர்ப்பை சமாளிக்கும் ஒரு திறமையோடு தான் இருப்பார்கள். இவ்வளவு காலத்தில் திமுக சந்திக்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியை எதிர்த்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட திமுகவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளா. அவர் மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் அவருக்கு பயப்படவேண்டும். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |