தேமுதிக-வின் கழகப்பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமகன்-மணமகளை வாழ்த்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “மழைக் காலங்களில் தமிழ்நாடு அரசு தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கிடையில் கட்சித்தொண்டர்கள் தான் எங்களுடைய கட்சியின் ஆணிவேர்.
அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்ஜிஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற பிரேமலதா இவ்வாறு கூறியுள்ளார். மழைநீர் வடிகால் பணிகளில் அரசின் முயற்சிகளை பாராட்டிய பிரேமலதா, தேமுதிக தொண்டர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.