Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எம்ஜிஆருனு சொல்லுறாங்க… ஜெயலலிதானு சொல்லுறாங்க… நம்ம வீரம் எங்கே போனது …!!

எடப்பாடியை ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆரை பன்னீர்செல்வமாகவும் பேசுகின்றார்கள் நம்முடைய வீரம் என்ன ஆனது ? என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர் கள்,  பேரூர் கழகச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. வரக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தல் பிரசார வியூகம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டமாக இது அமைந்துள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வரவேற்புரையில் பேசிய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது ஆவேசத்துடன் பேசினார். அவர் கூறும் போது, ஸ்டாலின் முன்கோபக்காரர், பொறுப்புக்கு வந்த பிறகு படிப்படியாக பக்குவப்பட்டு வந்துவிட்டார். தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் நம்மை எள்ளி நகையாடி வருகிறார் என்ற குற்றச்சாட்டு கூறினார்.

குறிப்பாக பேசும் போது, ஜெயலலிதாவாக  ஓபிஎஸ்,  எடப்பாடி எம்ஜிஆரா என பேசிய துரை முருகன், நம்முடைய வீரம் எங்கே போனது என்ற ஒரு கேள்வி கேட்டுள்ளார். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் வரக்கூடிய 23ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை தொடங்க இருப்பதாகவும், இதன் மூலமாக 16,000 கிராம சபை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தனது கருத்தை தெரிவித்தார்.

Categories

Tech |