Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா… அவர பக்கத்துல பார்த்திருக்கிறாரா பழனிசாமி… ஸ்டாலின் கேள்வி…!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை பக்கத்தில் நின்று பார்த்து இருக்கிறாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.

இரு கட்சி தலைவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற தொகுப்பில் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளார். இதனையடுத்து எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா என அவர் கூறியுள்ளார். ஒரு பெரியப்பாவாக இருந்து எம்ஜிஆர் என்னை நன்றாக படிக்கவும் அரசியலில் ஈடுபடவும் அறிவுறுத்தினார். எம்ஜிஆரை என்றாவது பக்கத்தில் சென்று பார்த்து இருக்கிறாரா முதல்வர் பழனிசாமி, என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |