சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆர்-ன் நூற்றாண்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார்.
அதன்பின் முதல்வர் பேசியதாவது “தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எனும் பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் நடித்த திரைப்படம் வெளியாகும் வேளையில் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் எப்படி இருந்தது என கேட்பார்.
தமிழ் உட்பட 6 மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார். தனிக் கட்சியை எம்.ஜி.ஆர் துவங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார். எம்ஜிஆர் தி.மு.க-வில் அதிக காலம் இருந்தவர். தேசிய இயக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆரை, தி.மு.க-விக்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. இதனிடையில் எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு அனுமதி வழங்கியது கருணாநிதி தான்” என்று பேசினார்.