Categories
அரசியல்

எம்ஜிஆர் பிறந்த நாள்…. பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு….,!!தமிழக அரசு…

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை அதிமுகவினர் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்,மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நடிகராக இருந்து பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், அன்னாரின் 105-வது பிறந்த நாளானது (ஜனவரி17) தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பித்த நிகழ்வுகள் எதையும் கடந்த அதிமுக ஆட்சியில் காண முடியவில்லை. அப்படியிருக்கையில் திமுக அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |