எம்ஜிஆரின் புகைப்படத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கான முழுத் தகுதியும் கொண்டது ஒரு இயக்கம் தான். அது அதிமுக மட்டுமே. எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படும் எந்த தரப்பினரும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடி எம்ஜிஆரைப் போன்று நன்மைகள் செய்வதாகவும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்கி உள்ளதாகவும் கூறியிருந்த நிலையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.