புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் நான் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல. தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல. என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்ஜிஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். அது உங்களுக்கு நினைவிருக்கட்டும். எதுவும் தடையல்ல” என்று அவர் கூறியுள்ளார்.