எம்ஜிஎம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்ஜிஎம் குழு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் சென்னை ,நெல்லை ,பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் பொழுதுபோக்கு, பூங்கா தீம் பார்க் நடத்தி வருகின்றன. அவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் எம்.ஜி.எம். குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகின்றது. மேலும் சில இடங்களில் சோதனை விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.