Categories
மாநில செய்திகள்

எம்பிசிக்கு உள்ஒதுக்கீடு வழக்கு …. ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு …!!

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஏ.குலசேகரன் என்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஜாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களை கணக்கிட்டு அரசுக்கு ஆறு மாதங்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்துள்ளார். அதில் அவர் ஆணையத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியாக உள் ஒதுக்கீடு அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும்  கோரியுள்ளார். தற்போது இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் கீழ் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 1983ம் வருடத்தில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு அம்பா குமார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆணையதிற்கு அறிக்கை அளிக்க மூன்று வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்திற்கு ஆறு மாதங்களிலேயே அறிக்கை அளிக்க கூறியிருப்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது என்று வாதாடியுள்ளார். இதற்கு நீதிபதிகள், தற்போது ஆணையமானது அவர்களுக்குரிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவில்லை. அதற்கு முன்பாகவே இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீதிபதிகள் கூறியுள்ளதாவது, ஆணையம் அதற்கான அறிக்கையை அளித்த பிறகு அதனை அரசு ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்த பின்பு அதனை எதிர்த்து ஒரு நபர் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |