Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எம்பிபிஎஸ் சீட்…. விட்டுக்கொடுத்த ஓய்வு பெற்ற 61 வயது ஆசிரியர்..!!

மருத்துவ படிப்பு இடத்தை விட்டுக் கொடுப்பதாக 61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் அறிவித்துள்ளார்.

தர்மபுரியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்.. 61 வயதான இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதற்கு பிறகு தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.. இந்த தரவரிசையில் 249ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார் சிவப்பிரகாசம்.. ஏற்கனவே இவர் 13 ஆண்டுகாலம் அரசு ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றாலும், மருத்துவ படிப்பை தேர்வு செய்து படித்து எழுதி நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார்..

மருத்துவ கலந்தாய்வுகாக இன்று சென்னை வந்து இருந்தாலும், அவர் தற்போது மருத்துவ படிப்பில் சேர கூடிய சூழலில் குறைந்த காலகட்டத்தில் மட்டுமே மருத்துவ சேவை ஆற்ற முடியும்.. எனவே ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் மருத்துவ கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்யவில்லை.. அதாவது அவர், தனது மருத்துவ படிப்பு இடத்தை விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இதை தேர்வு செய்யவில்லை என்றால் அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு வேறு ஒரு அரசு பள்ளி மாணவருக்கு சீட் கிடைக்கும். எனவே தேர்வு செய்யலாமா? வேண்டமா என்ற ஆலோசனையில் இருந்து வந்தார்..

இந்த நிலையில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றும், எந்த மருத்துவக்கல்லூரி என்று தேர்வு செய்யவில்லை. இவருடைய மகனின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளார் .. சிவபிரகாசத்தின் மகன் பயிற்சி மருத்துவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |