தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 14 மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் அனைத்து இந்திய ஒதுக்கீட்டை மாநில அரசு திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றை அரசிடம் கோரியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புதல் கிடைத்தால் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 510 எம்பிபிஎஸ் இடங்களும், 969 முதுகலை மருத்துவ இடங்களும், 184 டிஎம் மற்றும் 95 எம்சிஎச் இடங்களும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.