மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பாளர் பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள்,சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ஆம் தேதி ஆகும். இணையதள முகவரி, http://www.tnhealth.tn.gov.in, http://www.tnmedicalselection.org என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories