Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு…. கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து பூர்த்தியான இடங்களை பொறுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு இந்த வாரம் இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்ற நிலையில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பி டி எஸ் இடங்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ மாணவிகளுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை  வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைவதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |