கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா அக்காவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ரொஃபைலை மாற்றியுள்ளார். அதாவது முன்பு தனுஷ் உட்பட மொத்த குடும்பத்தின் புகைப்படத்தையும் சௌந்தர்யா ப்ரொஃபைலாக வைத்திருந்தார். ஆனால் தற்போது ரஜினியுடன் அக்கா, தங்கை இருவரும் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை வைத்துள்ளார்.
இதனால் டென்ஷனான ரஜினி ரசிகர்கள் ப்ரொஃபைல் போட்டோவை மாற்றியது ஐஸ்வர்யா என நினைத்து சௌந்தர்யாவை திட்ட தொடங்கியுள்ளனர். அதாவது இந்த வயதில் எங்க தலைவர் ரஜினி எப்படி இதை தாங்குவார் ? உங்களால் எங்க தலைவருக்கு எவ்ளோ கஷ்டம் என்று திட்டி கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.