குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் எம் ஆர் சி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு ராணுவ வீரர்களுக்கு 47 வாரங்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின் பல்வேறு மாநிலங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றார்கள். இந்த நிலையில் எம் ஆர் சி ராணுவ மையம் சார்பில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
இந்த முகாமை ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் பிரிகேடியர் யாதவ் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அதில் ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சி, களரி, தோடர் இன மக்களின் நடனம், படுகர் இன மக்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் முன்னாள் படை வீரர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ராணு உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.