எம்எல்ஏ அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் இ சேவை மையங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களிலும் இ சேவை மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களில் இ சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ சேவை மையங்கள் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.