Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ ஆன போதும்…. அமைச்சரான போதும் விமர்சனம்….. செயல்பாடுகளால் பதில் சொல்லி பாராட்டை பெறுவார் உதயநிதி – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்.!!

அமைச்சரானதுக்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு உதயநிதி செயல்பாட்டால் பதில் தருவார் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில்,  புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன். மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என்றார்.

மேலும் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக் கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராகவே ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படுகிறது. மகளிர் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை அரசின் கடமையாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறோம். சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் என அமைச்சரானபோது உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன், விளையாட்டு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையை உதயநிதி மேம்படுத்துவார் என நம்புகிறேன். விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி எம்எல்ஏ ஆனபோது வந்த விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதில் தந்தார். அதேபோல் அமைச்சரானதுக்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதில் தருவார். விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் உதயநிதி என்று புகழ்ந்து பேசினார்.

 

Categories

Tech |