ஜியோமி போனில் வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதற்கான விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல பிராண்ட் மொபைல்களை பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பாக தற்போது ஜியோமி போன் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு ஜியோமி போன் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்கள் போனில் வரும் விளம்பரங்களை எவ்வாறு தடுக்கலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜியோமி போனில் வரும் விளம்பரங்களை MIUI 12 அப்டேட் பெற்றிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் தடுக்க முடியும். MIUI system Ads-ஐ தடுக்க settings-> passwords->security-> authorisation and revocation-> அதனுள் MSA விருப்பத்தை ஆப் செய்யவும். இதனை அடுத்து personal ad recommendation-ஐ தடுக்க settings-> additional settings-> personal ad recommendations-ஐ ஆப் செய்யவும்.
இதனைத் தொடர்ந்து எம்ஐ ப்ரவுசர் விளம்பரங்களை தடுக்க, mi Browser-> settings-> Advanced சென்று Recommendations என்ற விருப்பத்தை ஆஃப் செய்யுங்கள். ஃபைல் மேனேஜர் விளம்பரங்களை ஆஃப் செய்ய mi File manager App – settings -> About-> Recommendations என்ற விருப்பத்தை ஆஃப் செய்யவும்.