எம்.சி.ஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்றி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு (யூஜிசி) ஒப்புதலையடுத்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம் சி ஏ -வில் சேர பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும்.
பிகாம், பி.எஸ்.சி, பி.ஏ படித்தவர்கள் பிளஸ் -2 வில் கணிதத்தை படமாக படித்திருக்க வேண்டும். எம் சி ஏ படிப்பு 2 ஆண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. யூ.ஜி.சி படிப்பில் 50% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பட்டியல் சமூகத்தினர் 45% மதிப்பெண் எடுத்திருக்கலாம். பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிட்டது.