Categories
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆரின் கனவு திட்டம் பாழாகும் நிலை… “அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம்”… இ.பி.எஸ் பேச்சு…!!!!

பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கி போய் இருப்பதாக நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம் தான் வழங்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய நூல் நவம்பர் மாத இறுதியிலும் டிசம்பர் வார முதலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கியுள்ளதாகவும், துணி நெய்யும் போது தறியில் நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால் துணி நெய்ய முடியாமலும் நெசவாளர்கள் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக எம்.ஜி.ஆர் கனவு திட்டமான இலவச வேஷ்டி, சேலை திட்டம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் நெசவாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அ.தி.மு.க போராட்டத்தை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |