பிக்பாஸ் சுரேஷ் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சுரேஷ். இவர் இந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பாக விளையாடி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சுரேஷ் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சுரேஷ் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசலாக எம்.ஜி.ஆர் போலவே சுரேஷ் இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தில் பிக்பாஸ் ஜோடிகள் போட்டியாளர்களான வனிதா, ஷாரிக் ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.