நமது எம்ஜிஆர் நாளேட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மறைமுகமாக விமர்சிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நமது எம்ஜிஆர் நாளேட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் சீண்டுவார் இன்றி கிடந்த அவரை சிம்மாசனத்தில் அமர வைத்ததற்கு காட்டும் விசுவாசம் இதுதானா?, பதவி வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி சரணாகதி அடைந்து நின்றவர்கள், பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சசிகலா தமிழகம் வந்ததும் அதிமுகவை மீட்டெடுப்பார். அவர் அதிமுகவை மீட்டெடுக்க போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் வஞ்சக பிறவிகளின் சுயரூபத்தை மக்களிடம் வெளிப்படுத்தும் தருணம் வந்துவிட்டது என எம்ஜிஆர் நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது.