Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் பாட்டு பாடி முதல்வர் எடப்பாடியை தாக்கிய ஸ்டாலின் …!!

எம்.ஜி.ஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக சார்பாக பொது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில்  நேற்று கடலூர் மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற சிறப்பு பொதுக்கூட்டதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் எம்ஜிஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.

அப்போது, உங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள…  உங்களை காப்பாற்றிக்கொள்ள….  தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை அடமானம் வைக்கிறீங்க. அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதுக்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என நாட்டுமக்கள் உங்களுக்கு உணர்த்த போகின்ற தேர்தல் தான் இந்த தேர்தல்.

எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் எம்ஜிஆர் ஒரு பாட்டு பாடி இருப்பார். சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும், ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். அப்படின்னு ஒரு பாட்டு பாடி இருப்பார். அதைத்தான் சொல்கிறேன் இப்போது. இந்த பாட்டு இன்றைக்கு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்திற்கு மிக சரியான வகைகளில் பொருந்தும். எனவே இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் தேர்தல் இது என தமிழக முதல்வரை சாடினார்.

Categories

Tech |