Categories
Uncategorized பல்சுவை

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் இன்று…. புரட்சி தலைவரின் அரசியல் பயணம்… கிடைத்த தொடர் வெற்றி…!!

திரையுலகில் புரட்சி நடிகர் என பெயர் பெற்ற எம்ஜிஆர் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கினார். பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சியை  வளர்க்க அரும்பாடுபட்ட புரட்சித்தலைவர் அகிலம்போற்றும் அளவுக்கு கட்சியின் கொள்கையை பரப்பினார். இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆவதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காரணமாக விளங்கினார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு தன்மீது  அன்பு கொண்ட மக்களுக்காக அண்ணா தோற்றுவித்த கட்சியை விட்டு விலகிய எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார்.

பின் அண்ணாவின் திருவுருவத்தைக் கட்சியின் கொடியில் பதித்ததோடு அவரது பெயரிலேயே கட்சியை தொடங்கினர். அநியாயத்தின் மொத்த உருவமான சகுனியின் கட்சியில் இருந்த நால்வர் அ.இ.அ.தி.மு.க வில் இணைந்ததால் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எம்.ஜி.ஆர் வுடன் சேர்த்து 5 ஆனது. அரசியல் வரலாற்றில் புதிய கட்சி தொடங்கிய  6 மாதங்களில் இடைத்தேர்தலைச் சந்தித்து வெற்றிவாகை சூடி முதல் அதிசய அத்தியாயத்தை ஏற்படுத்தினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வளரவிடாமல் தடுக்க சகுனியால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் புரட்சித்தலைவரால் சிதறடிக்கப்பட்டன.

1973-ம் ஆண்டு முதல் பாராளுமன்ற இடைத்தேர்தலை திண்டுகல்லில் சந்தித்து  தன்னை வெல்ல முடியாது என்று கொக்கரித்த கொடுங்கோலனின் கட்சி ஆட்சியில் இருந்த போதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி வாகை சூடியது. 1977-ம் ஆண்டு தமிழகத்தின் 6-வது சட்ட பேரவைக்காக நடைபெற்ற தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. மக்களின் எகோவித்த ஆதரவுடன் அண்ணாவின் வழியில் ஆட்சி கட்டிலில் அமர்ந்தார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணா கூறிய வழியில் குக்கிராமம் முதல் மாநகரம் வரை 1ரூபாய்க்கு படி அரிசி திட்டத்தை அமல் படுத்தினார்.

நாளைய குழந்தைச் செல்வங்கள் பசியினால் உழன்று விட கூடாது என்பதால் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர் நல்லாட்சியில் நாடு செழித்தது. 1980-ம் ஆண்டு 7-வது சட்ட பேரவைக்கான பொதுத்தேர்தலும் எம்ஜிஆர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 162 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது .இந்த முறையாவது வெற்றி பெற்று விடலாம் என்ற நப்பாசையில் களம் இறங்கிய சகுனியின் கட்சி மீண்டும் படு தோல்வி அடைந்து அகல பாதாளத்தில் விழுந்தது.

 

Categories

Tech |