Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் வீட்டில் சசிகலா…. OPS – EPS-க்கு அழைப்பு …!!

தொண்டர்களிடம் பேசிய சசிகலா, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களின் 105வது பிறந்த நாளில், புரட்சித்தலைவரின் நினைவு இல்லத்தில் உங்களுடன் சேர்ந்து பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இந்நாளில் ஏழை எளிய மக்களின் உயர்வுக்காக எத்தனையோ காரியங்களை புரட்சித்தலைவர் செய்திருக்கிறார். அதை இப்போது பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நன்னாளில் ஒற்றுமையாக இருந்து புரட்சித்தலைவரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும் தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவரின் ஆட்சியை நிச்சயம் கொண்டு வருவோம் என்பதை கூறிக்கொண்டு, புரட்சித்தலைவர் 105வது பிறந்த நாளில் அவருடைய நினைவு இல்லத்தில் உங்களுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Categories

Tech |