Categories
தேசிய செய்திகள்

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கு?…. சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல்….!!!!!

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ்(பிஎம்எல்ஏ), அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

அத்துடன் 51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது உள்ள வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர்களில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) எத்தனை பேர் என்பது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பதிவுசெய்த 121 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |