பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி அதுல் ராய் போலீசாரிடம் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இறுதி வாக்குமூலம் அளித்த இளம்பெண் சுப்ரீம் கோர்ட் வாசலில் தனது காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அதுல் ராய் மீது ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அதுல் ராய் போலீசில் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிறையில் இருக்கும் எம்பிகளுக்கு சலுகை அளிக்கப்படுவதாக அந்தப் பெண் புகார் அளித்திருந்தார்.
கடந்த 16ஆம் தேதி திடீரென்று டெல்லி சுப்ரீம் கோர்ட் வாயில் அருகே, அந்தப் பெண் தனது காதலருடன் தீக்குளித்தார். உயிருக்கு போராடி வந்த நிலையில் அப்பெண் அவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது காதலன் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். தீக்குளிப்பதற்கு முன்னதாக அவர் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அதுல் ராய் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோர் மீதும் அவர் குற்றம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.