Categories
மாநில செய்திகள்

எம்.பில் படிப்பு… கட்டணம் கிடையாது… தங்குமிடம் இலவசம்… உடனே முந்துங்கள்…!!!

மாணவ மாணவியர்கள் இலவசமாக தங்கும் விடுதி வசதியுடன் எம்பில் படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்மொழி வளர்ச்சிக்கு என தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். தமிழக பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. 2021 22 ஆம் ஆண்டுக்கான ஆய்வியல் நிறைஞர் பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.

மாணவர்கள் முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் 50% ஆகியவை சேர்த்து கணக்கிடப்பட்டு பட்டியல் அமைக்கப்படும். தேர்வில் அதிக அளவு மதிப்பெண் வரிசையில், தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. தங்குமிடமும் இலவசம். எம் பில் படிப்பில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி தேதி. மேலும் விவரங்களுக்கு 044-22542992 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Categories

Tech |