தேனியில் எம்.பி காரின் மீது கல்லை வீசிய வழக்கிற்காக அ.ம.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாளன்று தேனி மாவட்டம் பெருமாள் கவுண்டன்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை ரவீந்திரநாத் எம்.பி பார்வையிட வந்துள்ளார். அப்போது அவரது காரின் மீது சில நபர்கள் கல்லை வீசியதால் அதிலிருந்த கண்ணாடிகள் சேதமடைந்தது.
இதனையடுத்து கார் ஓட்டுனர் போடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 17 நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது அதே ஊரைச் சேர்ந்த அ.ம.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அவரது உறவினர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.