Categories
சினிமா

எம்.பி தேர்தல்: எனக்கு அந்த எண்ணம் இல்லை…. விளக்கம் கொடுத்த நடிகர் நாகார்ஜுனா….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நாகார்ஜுனா ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு நெருக்கமாக உள்ளார். அத்துடன் அரசு விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனையடுத்து நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்திருப்பதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இதற்கு நாகார்ஜுனா விளக்கமளித்து கூறியதாவது ”நான் அரசியலில் குதித்து விஜயவாடா தொகுதியில் எம்.பி பதவிக்கு போட்டியிடப் போகிறேன் என தகவல்கள் வந்துள்ளது.

அந்த தகவல் உண்மை இல்லை. தற்போதைக்கு நான் அரசியலை விட்டு விலகி இருக்கிறேன். எந்தஒரு தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் கிடையாது. நல்ல கதை கிடைத்தால் அரசியல் தலைவர் கதாபாத்திரத்தில் நடிப்பேனே தவிர்த்து அரசியலுக்கு வரும் ஆர்வமில்லை. இதற்கிடையில் தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு முறையும் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற பிரச்சாரம் நடப்பது வழக்கமாகிவிட்டது. தற்போதுகூட அப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

Categories

Tech |