Categories
மாநில செய்திகள்

எம்.பி பதவி திடீர் ராஜினாமா…. அதிமுகவில் பரபரப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஓ பன்னீர்செல்வம் கோபித்துக்கொண்டு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்து அதிருப்தியுடன் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கட்சி ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவை எம்பி பதவியிலிருந்து அதிமுகவின் கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், கேபி முனுசாமியும் வைத்தியலிங்கம் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுக எம்பி களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது

Categories

Tech |